Mathivaanaa 🌙
banner
kadunkaapi.bsky.social
Mathivaanaa 🌙
@kadunkaapi.bsky.social
தமிழ் - Reader - Writer
என்ன நினைத்தானோ
கண்ணை திறந்தவன்
மீண்டும் மூடிக் கொண்டான்..

நிச்சயமாக தெரியும்
இந்தமுறை
"கீர்த்தி எனக்கு மட்டும்
ஃப்ரெண்ட் ஆ இருக்கணும்"
என்றுதான் வேண்டியிருப்பான்..
July 29, 2025 at 1:44 PM
Reposted by Mathivaanaa 🌙
முட்டாளுங்க தங்களோட தேசப்பபற்று காமிக்கிறதுக்கு எடுக்குற ஆயுதம்தான் இந்த திடீர் போர் ஆதரவாளர்கள் எழுப்புற கரகோஷம். வரலாறும் தெரியாது அடிப்படை அறிவும் கிடையாது. வெறும் ஆட்டுமந்தை கூட்டம்
July 21, 2025 at 10:27 PM
இரண்டு, அணு ஆயுதம் கொண்ட நாடுகள் போரிடும் போது எப்படி நெஞ்சு பதறாமல் உங்களால் கைதட்ட முடிகிறது? எப்படி உங்களால் தீபாவளி என்று வாய் கூசாமல் கொண்டாட முடிகிறது? ஹிரோஷிமா, நாகசாகி கதையை படித்து வளர்ந்த உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லையா ? காஷ்மீரில் மரணிக்கும் மக்கள் மக்களாக உங்களுக்கு தெரிவதே இல்லையே ஏன் ? எதற்கும் கைகளை தட்டும் முன், கொண்டாடும் முன், போரை ரசிக்கும் முன், அண்ணாந்து பார்த்து கொள்ளுங்கள். அடுத்த குண்டு உங்கள் தலை மீதும் விழலாம்..
May 8, 2025 at 7:39 AM
போர் என்ற வார்த்தையை உச்சரிக்க பழகும் முன்னே இறக்கும் குழந்தைகள், எந்த பாவத்திற்கு தகுதியானவர்கள்?
அவர்கள் எம்மதம், எந்த நாடாயினும் வாழத் தகுந்தவர்கள் அல்லவா? குற்றவாளிகள் தண்டனைக்குரியவர்கள்.. போர் என்ற வார்த்தைக்கு பின்னாலேயே ஒன்றும் அறியாத மக்களின் பிணக்குவியல்கள் மலை போல குவிகிறது. அரசின் போரை, போர் நடவடிக்கைகளை ஆதரிக்கும் முன் மக்களாய், குறைந்த பட்ச மனிதாபிமானத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
May 8, 2025 at 7:28 AM
kadaisi few post parunga ennodathu theriyum
May 6, 2025 at 1:38 AM
naaane inga post panni atha ss eduthu vera app la post panrathukaga than varen
May 6, 2025 at 1:32 AM