Mathivaanaa 🌙
banner
kadunkaapi.bsky.social
Mathivaanaa 🌙
@kadunkaapi.bsky.social
தமிழ் - Reader - Writer
Pinned
People who get committed in this app will sing "நீல வானம்.. நீயும் நானும்" 💜
உங்களின் நாட்களின்
குறுக்கே என்னை கண்டால்,
அழைத்து விடாதீர்கள்...!

ஒரு வேளை நாம் எதிர்பட்டுக்
கொண்டால், ஒரு புன்னகையில்
மென்மையாக கடந்துவிடுங்கள்..

அழுத்தமாக சொல்கிறேன்,
தெரிந்தோ, தெரியாமலோ
"எப்படி இருக்க?" என்று மட்டும்
கேட்டு விடாதீர்கள்..

அணை உடைய ஒரு அதிர்வு
போதுமல்லவா ?
September 10, 2025 at 12:54 AM
காதலித்தல் இயல்பு..
காதலிக்கப்படுதல் வரம்..

காதலிக்கப்படுபவர்கள்
பாக்கியசாலிகள்..
September 6, 2025 at 8:57 AM
Siraj - warhorse...!🫡🔥
August 4, 2025 at 10:57 AM
என் பிரார்த்தனைக் கூடத்தில்
எந்தக் கடவுளும் இருந்ததில்லை..

உனக்கான பிரார்த்தனைகள்
மட்டும் இருந்து கொண்டிருந்தன..
July 29, 2025 at 4:26 PM
எரியும் மெழுகுவர்த்தியை
கைகளில் ஏந்திக்கொண்டு
சுட்டுவிடாமல் பார்த்து பார்த்து
நடக்கிறான் ஒரு குழந்தை..

அம்மாவின் உதவியோடு
நேராய் நிறுத்தியபின்
கண்களை இறுக்கி
மூடிக் கொள்கிறான்...

எத்தனை எத்தனை
வேண்டுதல்கள் குழந்தைகளுக்கு..

நாளைக்கு ஸ்கூல்
லீவ் விடனும்..
அம்மா அடிக்க
கூடாது என்னைய...
சாக்லேட், பொம்மை,
சைக்கிள் என நீள்கிறது
கடவுள் பரிசளிக்க
வேண்டிய பட்டியல்..
July 29, 2025 at 1:44 PM
Reposted by Mathivaanaa 🌙
முட்டாளுங்க தங்களோட தேசப்பபற்று காமிக்கிறதுக்கு எடுக்குற ஆயுதம்தான் இந்த திடீர் போர் ஆதரவாளர்கள் எழுப்புற கரகோஷம். வரலாறும் தெரியாது அடிப்படை அறிவும் கிடையாது. வெறும் ஆட்டுமந்தை கூட்டம்
July 21, 2025 at 10:27 PM
Of course she has to be Tamil, otherwise who can I sing these lines to?

பூவாளி பன்னீரும்
புதுச்சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காக தான்...

நெஞ்சோட சந்தம் புடிச்சாளே
நான் ஆடப் போறேன்..

உன்னால என்னை மறந்தேனே
ஆகாச வீரன்...
July 17, 2025 at 4:12 PM
எதையாவது எழுதிக் கொண்டிருந்த
கைகள், உன்னை மட்டும்
எழுத பழகிவிட்டது..

கொஞ்சம் எங்கேயாவது
பிசிறு தட்டினாலும் சரி
காகிதத்தோடு கவிதையையும்
கிழித்து எறிந்து விடுகிறேன்..

பூரணத்தின் பொருள்
அல்லவா நீ ....
July 15, 2025 at 4:38 PM
someone buy me a book to restart my reading phase.
July 10, 2025 at 10:51 AM
Switching between apps, texting with the same person..Ahh shit, I sense my future..
July 10, 2025 at 8:21 AM
எத்தனை புயல்களைக்
கடந்திருக்கும்
இவ்விருட்சம்...
இன்று உன்
பூந்தென்றலுக்கு
வேர் அசைகிறது...
June 7, 2025 at 12:33 PM
The immediate moment I hear the words hardwork, persistence, love, hope, chance, king, legend,

I get remind of VIRAT's face.. I'm super proud and happy for witnessed his PRIME.
June 3, 2025 at 7:54 PM
இடது தோளில் வந்து
அமருகிறது ஓர் பட்டாம்பூச்சி..

ரெக்கைகள் மட்டும்
அசைந்து கொண்டே இருக்கிறது..

பயம் போலும்..
பட்டென்று விரலுடிக்கில்
சிக்கி நசுங்கி விடுமென...

எனக்கும் பயம் தான்..
சட்டென்று பறந்துவிடுமோ என

இருந்துவிட்டு போகட்டும்
அதற்கு விருப்பமான
காலம் வரை..

பாரம் பல தாங்கிய தோள்கள்..
பட்டாம்பூச்சி தாங்காதா என்ன.?
May 30, 2025 at 8:01 AM
In english ~

I'm afraid of losing you..

In தமிழ் ~

கனவுதான் இதுவும், கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்..
May 20, 2025 at 6:25 PM
பெறுதலில் என்ன
இருக்கிறது ??

கொடுத்தல் தானே
அன்பின் அர்த்தம்..
May 14, 2025 at 12:11 PM
ஏதாவது அழிப்பான்
இருக்கிறதா ?

ஒரு யுகம் உன்னுடன்
வாழ கண்ட கனவுகளை
அழிக்கும் அளவிற்கு
கொஞ்சம் பெரிய
அழிப்பான்...?
May 10, 2025 at 6:21 AM
போர்.. எந்தப் போரும் பூக்களை மலரச் செய்ய போவதில்லை. எந்தப் போரும் புன்னகைகளை நிலைக்க செய்ய போவதில்லை. போர் ஒரு அறமற்ற செயல். மனிதாபிமானம் அற்ற செயல். காசாவிற்கு கண்ணீர் சிந்தியவர்கள் இன்று இந்தியாவின் குண்டு மழைகளுக்கு கை தட்டுவது, சமூக ஊடகங்களுக்காக அவர்கள் போற்றிகொண்ட மனிதநேய ஆடைகளை அவிழ்த்து அம்மணமாக ஆக்குகிறது. போருக்கு பின் நாடு இயல்புக்கு திரும்பிவிடும். பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் எப்போது திரும்புவது ?
May 8, 2025 at 7:21 AM
சாரல் சிதறும்
மேகம் ஒன்றின் அடியில்,

உன் தேநீர் கோப்பையும்,
என் காப்பி கோப்பையும்
முட்டிக்கொள்ளும்,

முற்றத்து உரையாடல்
ஒன்றிற்குத்தான்
இவ்வுயிர் தப்பிப்பிழைத்து
நிற்கின்றது...
May 6, 2025 at 9:32 AM
உங்கள் இருப்பு ஒருவருக்கு
அத்தியாவசியம் ஆகும் வரை,

யாருடைய கண்ணீருக்காவது
நீங்கள் கரங்கள் ஆகும் வரை,

ஒரு அன்பில் நீங்கள்
மூழ்கி தத்தளிக்கும் வரை,

பிறப்பிற்கான பொருளாக
ஒரு அன்பை, காதலை உணரும் வரை,

பறந்து கொண்டே இருங்கள்..
வானம் அத்தனை பெரியது..
May 6, 2025 at 9:22 AM
கனமாக தான் இருக்கிறது
இவ்வாழ்வும், இவ்வுழகும்..

நகர்த்தி கொண்டு செல்வது
நீயும், நின் நினைவும் மட்டும்தான்..
May 6, 2025 at 12:03 AM
நீ தொடும் விதம் தரும் விசை
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென உறுதிசெய்..

முகைமழை முகைமழை..

(mugaimazhai - Tourist family)
May 5, 2025 at 8:04 AM
பெருங்காற்றில்,
சருகுகள் நொறுங்கும்
சத்தத்திற்கு பதறுகின்றன
பழுத்த இலைகள்...
April 26, 2025 at 4:58 PM
மழைக்கு ஒதுங்கிய
கூரை சாய்ப்பின்
பிளவுகள் வழியே
சொட்டுகிறது மழை நீர்..

உச்சி வருடி,
முதுகுத்தண்டில் இறங்கும்
மழை நீரில்
அப்படியே அவள்
புன்னகையின் இதம்..
April 24, 2025 at 12:15 PM
ஒரு வேளை
நான் எழுதி, அழித்த
குறுஞ்செய்திகளை
நீ வாசித்திருந்தால்,
என்றோ என்னை வெறுத்திருப்பாய்..
யாரோவாக கூட
நாம் மாறியிருப்போம்..

ஆனால், நீ ஒன்றை
உணர்ந்திருப்பாய்..
யாதுமற்று நீ நிற்க
நேர்ந்தாலும்,
என் நேசக்கரம் உனக்காக
நீட்டப்பட்டே இருக்கும் என்று..

யாரோவென்று நாம்
ஆனாலும்,
உன்னை அதிகமாக
நேசித்தவன் நான்
மட்டும் என்று...
April 23, 2025 at 10:03 AM
மனிதர்களில் பூரணமான
அழகானவர்கள் என்று
யாரும் கிடையாது..

யாருடன் உரையாட,
யாருடன் உலாவ,
யாருடன் எஞ்சிய நொடிகளை
கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்க,

பிடித்திருக்கிறதோ,
அவர்கள் அழகானவர்கள்
அவர்கள் பூரணமானவர்கள்..
April 20, 2025 at 8:40 PM