Cable Sankar
cablesankar.bsky.social
Cable Sankar
@cablesankar.bsky.social
Film Director, Producer,Distributor, Film business, Actor, Writer, IGENE DI&VFX Studio Business Head, C.E.O of OTT Plus
ரிடையர்ட் ஆகப் போகும் போலீஸ் ஆபீசர். அவருக்கும் அவரது மகளுக்கும் இடையே நல்ல டேர்ம்ஸ் இல்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து விசாரணை சூடுபிடிக்க, மெல்ல ஆபீசரின் மகள் மீதான சந்தேகம் வலுக்கிறது. அட்டகாசமான சைக்கலாஜிக்கல் திரில்லர். ப்ரீத் டேக்கிங் ஷாட் கம்போசிஷன். என்ன படு ஸ்லோ. கதை ஸ்லோவாக இருந்தால் பரவாயில்லை. டிவி சீரியலில் ஒவ்வொருவருக்கும் ஒரு டயலாக்குக்கு க்ளோசப் போவார்களோ அதுபோல இதில் ஒரு -1
November 26, 2024 at 3:26 AM
நஸ்ரியாவை கிட்டத்தட்ட மலையாள ஜெனிலியாவாகவே பார்த்திருந்த மாத்திரத்தில் இப்படத்தின் கேரக்டர் அத்தனை பொருத்தமாய் இருந்தது. நஸ்ரியாவை கேஸ்ட் செய்த போதே இப்படத்தின் வெற்றி 50 சதவிகிதம் உறுதி ஆகிவிட்ட நிலையில் ஹிட்ச்காக்கின் ரியர் விண்டோவை நியாபகப்படுத்திய திரைக்கதை. கடைசியில் என்ன நடந்தது என்பதை 20 நிமிடங்கள் எடிட்டிங்கில் சொன்னவிதம் கொள்ளாம். சுவாரஸ்யமான படம். #sookshamadharshini #malayalamfilm2024
November 26, 2024 at 3:09 AM
நானும் ரெண்டு நாளா பாத்துட்டுருக்கேன். இன்னும் ஹை ஸ்பீடுல ஓடுறாங்க. சத்தம் வராம கண்டெயினர்ல பல்ட்டி அடிக்கிறாங்க. அரையிருட்டுலேயே மாத்தி மாத்தி பார்த்துக்குறாங்க. ஆனா என்ன பண்ணுறாங்கன்னுதான் புரியலை. என்னைக்கு பார்த்து என்னைக்கு முடிக்கிறது. தியேட்டர்லேயே பார்த்திருக்கலாம். மூணு மணி நேரத்துல முடிஞ்சிருக்கும். #Devara #telugufilm2024
November 10, 2024 at 12:21 PM
இயக்குனர் கிரிஷுக்கு கல்லூரி பசங்களின் மனநிலையில் கதை எழுத மிகவும் பிடிக்கும் போல. ப்ரேமலு போலவே இதிலும் இரண்டு கல்லூரி காதலர்கள். அதில் பையன் ஒரு ஹைஃபர் ஹேக்கர். பெண் கிறிஸ்துவ பைனான்ஸ் கம்பெனி ஓனர் பெண். பெண் ஒரு கட்டத்தில் இவன் எதிலும் செட்டில் ஆக மாட்டான் என ப்ரேக்கப் பண்ணிவிட்டுப் போக, நேரில் பேசப் போய் அவள் அப்பாவிடம் கன்னத்தில் அப்பு வாங்கி வருகிறான்.
November 9, 2024 at 4:25 AM
ஐந்தாம் வேதம். வழக்கமான இந்திரா சவுந்தராஜன், நாகா காம்பினேஷன் மைத்திலாஜிக்கல் திரில்லர். அந்த வகையில் மிக சுவாரஸ்யமான நாட் தான். ஒவ்வொரு எபிசோடிலும் சரியான ஹூக் பாயிண்டுடன் அடுத்த எபிசோடுக்கு போனது சுவாரஸ்யமே. நாகா தான் கிரியேட் செய்திருந்தாலும், அவரின் டச் மிக குறைவாகவே இருந்தது. சாய் தன்ஷிகாவின் கேரக்டரில் மிகச் சரியாய் பொருந்தியிருந்தார்.
October 27, 2024 at 6:17 PM
Happy to Announce the New film with the blessing of almighty. #kamukapi
October 23, 2024 at 5:59 AM