maatram.org
banner
maatram.bsky.social
maatram.org
@maatram.bsky.social
Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 www.maatram.org
இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது? maatram.org/articles/12542

by V. Thanabalasingham

#lka #SriLanka
January 20, 2026 at 10:46 AM
'டித்வா' பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அணைத்து கரிசணையுடைய தரப்பினரையும் உள்ளடக்கிய பொது நடவடிக்கை செயலணி ஒன்றை உருவாக்குங்கள் – மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு

#lka #SriLanka #Malaiyaham
January 14, 2026 at 5:39 AM
"எந்த மண்ணை நாம் உருவாக்கினோமோ – எந்த மண்ணுக்காக சிவனு லட்சுமணன் தன்னுயிரை நீத்தானோ அம்மண்ணுக்காக – நாம் போராடுவோம். எமது மண்ணில் இருந்துகொண்டு எமது உரிமைக்காகப் போராடுவோம்.” maatram.org?p=9641

#lka #SriLanka #MalaiyahaTamil
January 10, 2026 at 5:00 PM
மலையக தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து இன்று மலையக தியாகிகள் தினம் கொட்டகலையில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

#lka #SriLanka #MalaiyahaTamil
January 10, 2026 at 4:56 PM
சர்வதேச சமூகத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளின் விளைவாக தோன்றியதைப் போன்ற நெருக்கடிகள் தங்களுக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகுந்த விவேகத்துடன் செயற்பட்டுவருகிறது. maatram.org?p=12535

#lka #SriLanka
January 9, 2026 at 7:32 AM
ஜப்பானின் ‘கக்கோ-சைக்காய்’ மாதிரி நமக்குச் சொல்லும் அடிப்படை உண்மை இதுதான்: மீட்சி என்பது இழந்ததைப் பழையபடி அப்படியே உருவாக்குவதல்ல, மாறாக முன்னைய நிலையை விடவும் வலிமையானதாக உருவாக்குவதாகும் maatram.org/articles/12530

#lka #SriLanka #CycloneDitwah
January 5, 2026 at 9:03 AM
திருகோணமலை மாணவர் ஐவர் படுகொலை: நீதியின்றி தொடரும் 20 ஆண்டுகள்...

மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985)
யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985)
லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985)
தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985)
சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985)

#lka #SriLanka #Trinco5
January 3, 2026 at 6:31 AM
இலங்கை தமிழர்களின் கதியை இந்தியாவின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு நிற்கின்றன தமிழ்க் கட்சிகள். இலங்கை அரசாங்கத்தை அசைப்பதற்காக இந்திய அரசாங்கத்தை முதலில் அசைப்பதே தற்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. maatram.org/articles/12525

#lka #SriLanka
January 1, 2026 at 12:03 PM
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களை துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி துல்லியமாக வரையறுக்கத் தவறியதன் மூலம், PTA, CTA மற்றும் ATA ஆகியவற்றில் இருந்த அதே சிக்கல்களையும் குறைபாடுகளையும் PSTAவும் கொண்டுள்ளது. maatram.org/articles/12519

by மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் லயனல் போபகே

#RepealPSTA #NoPSTA
December 31, 2025 at 4:02 AM
இன்று அது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக குரல் கொடுப்பவர்களின் கைநூலாக விளங்குகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை இடதுசாரிகள் தடுமாற்றமின்றி தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறார்கள். maatram.org/articles/12513

#lka #SriLanka #NMPerera
December 28, 2025 at 5:44 AM
மலையக மக்கள் இடர் நேரும் லயன் குடியிருப்புகளிலிருந்து சமூகமாக, பாதுகாப்பான, வாழ்வாதாரத்திற்கு அண்மித்த, காணி உறுதியுடன்கூடிய இடங்களுக்கு எவ்வாறு செல்லப்போகின்றார்கள் என்பது பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். maatram.org/articles/12502

#SriLanka #MalaiyahaLandRights #MalaiyahaTamil #LandRightsForMalaiyahaTamil #மலையகக்காணியுரிமை #எமதுமண்எமதுஉரிமை #மலையகமக்கள்
December 25, 2025 at 3:30 AM
நில உரிமை, தரமான வீதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தேசியத் தரத்தில் வழங்குவது என்பது தோட்ட மக்களுக்கு அரசு வழங்கும் சலுகை அல்ல; அது அவர்களின் சட்டபூர்வமான உரிமை. maatram.org/articles/12499

#lka #SriLanka #MalaiyahaLandRights #MalaiyahaTamil
December 24, 2025 at 2:31 PM
இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் நிதி இழப்புகள் குறித்து உலக வங்கி அண்மையில் அறிக்கை ஒன்றை வௌியிட்டது. இந்தப் பேரிடரின் தீவிரத்தை கீழே தரப்பட்டிருக்கும் Infographic சுருக்கமாக விளக்குகின்றது.

#lka #SriLanka #DitwahCyclone #Ditwah
December 24, 2025 at 2:30 PM
மலையகத் தமிழர்களும் இலங்கையின் வேறு பாகங்களுக்கு குடிபெயரத் தொடங்கினால் தங்களுக்கான உரிமைகளைக் கோரமுடியாதவாறு தனியான ஒரு சமூகம் என்ற அடையாளத்தை அவர்கள் இழந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. maatram.org/articles/12493

#lka #SriLanka #MalaiyahaLandRights #MalaiyahaTamil
December 23, 2025 at 3:43 AM
தனது மறைவிடத்தில் இருந்து இரகசியமாக கடல் மார்க்கமாக வெளியேறி நோர்வேக்குச் சென்று நோபல் சமாதானப் பரிசை தானே நேரடியாக சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி ஒஸ்லோவில் நடைபெற்ற வைபவத்தில் பெறுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. maatram.org/articles/12484

#DonaldTrump
December 19, 2025 at 9:09 AM
மண் சரிந்து ஒருவர் புதையுண்ட இடத்தின் அருகில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் மலையகத் தாய் ஒருவர்.

📷 Amalini De Sayrah

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 15, 2025 at 10:30 AM
மலையக மக்களுக்கு காணி வழங்குவதை மறுத்தல் என்பது காணியின் பரப்பு போதாமை அல்லது பெருந்தோட்ட பொருளாதார வீழ்ச்சிக் காரணியோ அல்லது சுற்றாடல் காரணியோ சார்ந்ததல்ல. மாறாக மலையக தமிழர்கள் அந்நியர்கள், அடிமைகள், கூலிக்காரர்கள், மற்றவர்களுக்கு நிகரானவர்கள் அல்ல என்ற கருத்துநிலைகளில் இருந்து மட்டுமே வரக்கூடிய பிரச்சினையாகும். maatram.org/articles/12464

#lka #SriLanka #CycloneDitwah #Ditwah #MalaiyahaTamil
December 15, 2025 at 9:05 AM
மலையக சமூகத்தின் இன்றைய நிலை

Cartoon: Pradeep Kumar

#SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 15, 2025 at 5:29 AM
அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்தக் கருத்துக்கள். maatram.org/articles/12455

by V. Thanabalasingham

#SriLanka #LTTE #MaaveerarNaal
December 5, 2025 at 5:20 PM
பலியானோர் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்தது.

நிலவர அறிக்கை (05.12.2025, 6.00pm)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 5, 2025 at 2:51 PM
அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையான வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. maatram.org/articles/12449

#lka #SriLanka #MalaiyahaTamil
December 3, 2025 at 11:31 AM
யார் எச்சரிக்கப்படுகிறார்கள்? இலங்கையில் மொழி சார்ந்த பாகுபாடு மற்றும் பேரிடர் தொடர்பாடல் maatram.org/articles/12442

by Sanjana Hattotuwa

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 2, 2025 at 12:58 PM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை

www.facebook.com/share/p/1BSA...

#lka #SriLanka
November 28, 2025 at 8:12 AM
சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. maatram.org/articles/12438

by V. Thanabalasingham

#lka #SriLanka
November 26, 2025 at 10:46 AM
தொல்பொருள் திணைக்களம் புத்த சாசன அமைச்சிலிருந்து தனியான ஒரு சுயாதீனமான நிறுவனமாக நிறுவப்படவேண்டும். அதன் செயற்பாடுகள் வௌிப்படைத்தன்மையுடன் இடம்பெற பொதுமக்களின் கருத்துகளையும் புகார்களையும் பெறுவதற்கான முறையான அமைப்பை உருவாக்கவேண்டும் - சம உரிமை இயக்கம் புத்த சாசன அமைச்சிடம் கோரிக்கை
November 25, 2025 at 11:47 AM