kidcha.bsky.social
@kidcha.bsky.social
நூறாண்டை கடந்த பாட்டனாரின் வீட்டு ஹாலில் இது போன்ற ஓவியம் ஃபிரேமிற்குள் அடைபட்டுக்கிடந்தது. ரவி வர்மாவின் ஓவிய அச்சுப்பிரதி இது என உணர வயது 15 கடந்தது. அந்த பால்யத்தில் இது ஒரு போதும் வெண்ணிற ஆடை தேவதையாக இருந்ததில்லை. இன்றும் அது மனதிற்குள் பீதியூட்டும் பெண் ஆவி என தோன்றியதற்கு என்ன காரணம் என புலப்பட்டதே இல்லை!
November 27, 2024 at 9:11 AM