tamilxpress.bsky.social
@tamilxpress.bsky.social
மின்சார வாகனம் வெச்சிருக்கீங்களா..? மக்களே உஷார்..!! கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

பெட்ரோல் விலை உயர்வு, சுற்றுச்சூழலைக் காக்கும் அக்கறை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் தற்போது மின்சார வாகனங்களின் (இ-பைக்) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக,…
மின்சார வாகனம் வெச்சிருக்கீங்களா..? மக்களே உஷார்..!! கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
பெட்ரோல் விலை உயர்வு, சுற்றுச்சூழலைக் காக்கும் அக்கறை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் தற்போது மின்சார வாகனங்களின் (இ-பைக்) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அலுவலக பயணம் செய்வோர் மற்றும் டெலிவரி பணிகளில் ஈடுபடுவோர் மத்தியில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. தமிழக அரசு வழங்கும் மானியங்கள், சாலை வரிகளில் சலுகைகள் போன்ற ஊக்குவிப்புகளும் இ-பைக்குகளின் விற்பனையை தூண்டியுள்ளது. மாதந்தோறும் பெட்ரோலுக்கு செலவாகும் ஆயிரக்கணக்கான ரூபாயுடன் ஒப்பிடுகையில், இ-பைக்குகளின் சார்ஜிங் செலவு மிகக் குறைவாக இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்த வாகனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
tamilxpress.com
December 6, 2025 at 7:33 AM
செம குட் நியூஸ்..!! இனி வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு செய்யலாம்..!! 10 நிமிடங்களில் வேலையை முடிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

தமிழ்நாட்டில் சுமார் 590 சார் பதிவாளர் அலுவலகங்கள் (Sub-Registrar Offices) சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, உயில் மற்றும் கடன் ஆவணப் பதிவுகள் போன்ற பல்வேறு சட்டப்பூர்வ ஆவணப்…
செம குட் நியூஸ்..!! இனி வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு செய்யலாம்..!! 10 நிமிடங்களில் வேலையை முடிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?
தமிழ்நாட்டில் சுமார் 590 சார் பதிவாளர் அலுவலகங்கள் (Sub-Registrar Offices) சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, உயில் மற்றும் கடன் ஆவணப் பதிவுகள் போன்ற பல்வேறு சட்டப்பூர்வ ஆவணப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன. வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் கிரைய பத்திரப்பதிவுக்காகவும், மற்ற சேவைகளுக்காகவும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் நிலையில், குறிப்பாக முகூர்த்த நாட்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். பத்திரப்பதிவு சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சார்பில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
tamilxpress.com
December 5, 2025 at 10:06 AM
தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கம்..? அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரப் பணிகள் (SIR - Special Intensive Revision) தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால்…
தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கம்..? அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரப் பணிகள் (SIR - Special Intensive Revision) தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் முடிவில், தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த SIR பணியில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஓக்கள் (Booth Level Officers), இந்தப் பணிகளைச் சரியான முறையில் செயல்படுத்த முடியாமல் சிரமத்தில் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
tamilxpress.com
December 4, 2025 at 8:48 AM
ரேஷன் கார்டு வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்காம இருக்கீங்களா..? மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!

ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் மிகப் பெரிய உதவியான ரேஷன் கார்டுகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. போலி…
ரேஷன் கார்டு வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்காம இருக்கீங்களா..? மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!
ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் மிகப் பெரிய உதவியான ரேஷன் கார்டுகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. போலி கார்டுகள் மற்றும் தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணியைத் துரிதப்படுத்தியுள்ள நிலையில், கேஒய்சி (KYC) அப்டேட் செய்யாதவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில அரசுகள் தீவிர சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளன. பலர் குடும்ப வருமானத்தைக் குறைவாகக் காட்டியும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தியும் 2 அல்லது 3 ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்திருப்பதும், அவற்றை ரேஷன் வாங்குவதற்குப் பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
tamilxpress.com
December 4, 2025 at 8:42 AM
ராமதாஸ் – அன்புமணி மோதல்..!! பாமக சின்னம் முடக்கப்படும்..!! இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீடித்து வரும் தலைமைப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைவர் தான் தான் என்று அன்புமணி தரப்பு…
ராமதாஸ் – அன்புமணி மோதல்..!! பாமக சின்னம் முடக்கப்படும்..!! இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீடித்து வரும் தலைமைப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைவர் தான் தான் என்று அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்ததன் பேரில், இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அன்புமணியை கட்சியின் தலைவராக அங்கீகரித்ததாக தகவல் வெளியானது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக, ராமதாஸ் தரப்பு கடும் அதிருப்தி தெரிவித்தது. தேர்தல் ஆணையமும், அன்புமணி தரப்பும் சேர்ந்து மோசடி செய்து பாமக கட்சியைப் பறிக்கப் பார்ப்பதாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது.
tamilxpress.com
December 4, 2025 at 8:35 AM
“இனி கால அவகாசமே கிடையாது”..!! ஊழியர்களுக்கு ஷாக்கிங் கொடுத்த EPFO அமைப்பு..!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), பிஎஃப் கணக்குகளின் (UAN) யுஏஎன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை இனி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.…
“இனி கால அவகாசமே கிடையாது”..!! ஊழியர்களுக்கு ஷாக்கிங் கொடுத்த EPFO அமைப்பு..!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), பிஎஃப் கணக்குகளின் (UAN) யுஏஎன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை இனி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 31, 2025 உடன் காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், இதுகுறித்த புதிய சுற்றறிக்கையை இபிஎஃப்ஓ டிசம்பர் 1, 2025 அன்று வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய கெடுபிடி குறிப்பிட்ட தொழில்துறையினர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கெல்லாம் கூடுதல் பாதிப்பு? ஆரம்பத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
tamilxpress.com
December 3, 2025 at 3:31 AM
ஷாக்கிங் நியூஸ்..!! ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை இனி கிடைக்காது..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட தகுதியான பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.…
ஷாக்கிங் நியூஸ்..!! ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை இனி கிடைக்காது..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட தகுதியான பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக கடந்த 3 மாதங்களாக மாநிலம் முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உரிமைத் தொகைக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். இந்த 28 லட்சம் விண்ணப்பங்களையும் தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இவற்றில் தகுதியான பயனாளிகளுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அவர்களின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகையான ரூ.
tamilxpress.com
December 3, 2025 at 2:30 AM
ரேஷன் கடைகளில் வெளிநபர்களா..? உடனே கைது செய்ய உத்தரவு..!! அனைத்து ஊழியர்களுக்கும் ஐடி கார்டு கட்டாயம்..!!

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், வெளிநபர்கள் விற்பனை…
ரேஷன் கடைகளில் வெளிநபர்களா..? உடனே கைது செய்ய உத்தரவு..!! அனைத்து ஊழியர்களுக்கும் ஐடி கார்டு கட்டாயம்..!!
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், வெளிநபர்கள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், தேவையின்றி வெளி நபர்கள் ரேஷன் கடைகளில் இருந்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) எச்சரிக்கை விடுத்துள்ளார். அடையாள அட்டை அணியாததால் குழப்பம் : தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
tamilxpress.com
December 3, 2025 at 1:30 AM
நான்-ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவோரா நீங்கள்..? இந்த 3 தவறுகளை எப்போதும் பண்ணிடாதீங்க..!!

இன்றைய நவீன சமையலறைகளில் நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் (Non-Stick Pan) பயன்படுத்துவது மிக சாதாரணமாகிவிட்டது. எனினும், இவை உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.…
நான்-ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவோரா நீங்கள்..? இந்த 3 தவறுகளை எப்போதும் பண்ணிடாதீங்க..!!
இன்றைய நவீன சமையலறைகளில் நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் (Non-Stick Pan) பயன்படுத்துவது மிக சாதாரணமாகிவிட்டது. எனினும், இவை உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. குறிப்பாக, அதிகம் சூடாக்கப்பட்ட அல்லது தேய்ந்த நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நீண்டகால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்தக் கேடுகளைத் தற்காத்துக் கொள்ள, நாம் நான்-ஸ்டிக் பாத்திரங்களில் செய்யக்கூடாத 3 முக்கியமான விஷயங்களை இங்கே காணலாம். காலியான பாத்திரத்தை சூடுபடுத்துதல் கூடாது : சிலர் சமைக்க தொடங்கும் முன், நான்-ஸ்டிக் பாத்திரம் சூடான பிறகு தோசை, சப்பாத்தி அல்லது பிற பொருட்களைப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள்.
tamilxpress.com
December 3, 2025 at 12:30 AM
தங்கம் vs வெள்ளி..!! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!! நிபுணர்கள் கணிப்பு..!!

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருவது, நடுத்தர மக்களைப் பாதித்தாலும், முதலீட்டாளர்களின் கவனத்தை மாற்றுப் பக்கம் திருப்பியுள்ளது. பாரம்பரிய முதலீடான தங்கம்,…
தங்கம் vs வெள்ளி..!! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!! நிபுணர்கள் கணிப்பு..!!
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருவது, நடுத்தர மக்களைப் பாதித்தாலும், முதலீட்டாளர்களின் கவனத்தை மாற்றுப் பக்கம் திருப்பியுள்ளது. பாரம்பரிய முதலீடான தங்கம், பங்குகள், பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளை விஞ்சி, தற்போது வெள்ளியானது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டில் வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதுடன், தங்கத்தை விட முதலீட்டாளர்கள் வெள்ளி பக்கம் திரும்ப தொடங்கி உள்ளனர். சர்வதேச சந்தையில் புதிய சாதனை : வெள்ளியின் இந்த எழுச்சி குறித்து சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
tamilxpress.com
December 2, 2025 at 11:31 PM
களைகட்டும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்..!! 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீப கொப்பரை..!!

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் இடையே…
களைகட்டும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்..!! 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீப கொப்பரை..!!
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட ஆணவத்தை அடக்க, சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னிப் பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்தப் புனிதம் நிறைந்த நாளே ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 2,668 அடி உயர மலையில் தீபம் : அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையே அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானே அக்னிப் பிழம்பாக காட்சியளித்ததின் அடையாளமாக, கார்த்திகை தீபத்தன்று இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கமாகும்.
tamilxpress.com
December 2, 2025 at 11:09 AM
டிட்வா புயல் பாதிப்பு..!! விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

டிட்வா புயல் மற்றும் அதை தொடர்ந்த கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென்…
டிட்வா புயல் பாதிப்பு..!! விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!
டிட்வா புயல் மற்றும் அதை தொடர்ந்த கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலும் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்தனர். பயிர் சேதங்களுக்கு ரூ. 20,000 நிவாரணம் : மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
tamilxpress.com
December 2, 2025 at 10:41 AM
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? ரயில்வேயில் 3,058 காலிப்பணியிடங்கள்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

இந்திய ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board - RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள 3,058…
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? ரயில்வேயில் 3,058 காலிப்பணியிடங்கள்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
இந்திய ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board - RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள 3,058 இளநிலை கிளார்க் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பதவி மற்றும் காலியிடங்கள் : Commercial (Ticket Clerk) - 2424 Accounts Clerk (Typist) - 394…
tamilxpress.com
December 2, 2025 at 10:28 AM
Business Tips | ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த உதவும் 8 முக்கியமாக விஷயங்கள்..!! நிபுணர் கொடுக்கும் டிப்ஸ்..!!

“எவ்வளவு காலம்தான் சம்பளம் வாங்குவது? நாமும் பலருக்குச் சம்பளம் கொடுக்க வேண்டாமா?” என்ற எண்ணம் இன்று இளைஞர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தொழில் (Business) என்பது பலரின்…
Business Tips | ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த உதவும் 8 முக்கியமாக விஷயங்கள்..!! நிபுணர் கொடுக்கும் டிப்ஸ்..!!
“எவ்வளவு காலம்தான் சம்பளம் வாங்குவது? நாமும் பலருக்குச் சம்பளம் கொடுக்க வேண்டாமா?” என்ற எண்ணம் இன்று இளைஞர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தொழில் (Business) என்பது பலரின் விருப்பமான தேர்வாக மாறிவிட்டது. இருப்பினும், ஒரு தொழில் எண்ணம் மட்டும் வெற்றியை ஈட்டித் தராது. ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதை லாபகரமாக நடத்துவதற்குத் தேவையான எட்டு முக்கியமான அடிப்படைகள் உள்ளன என்று சீ சேஞ்ச் கன்சல்டிங் (See Change Consulting) நிறுவனர் M.K. ஆனந்த் வழிகாட்டுகிறார். தொழிலை உருவாக்க உதவும் 8 படிகள் :
tamilxpress.com
December 2, 2025 at 10:06 AM
மாதம் ரூ.69,100 வரை சம்பளம்..!! மொத்தம் 25,487 காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!!

மத்திய அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பி வரும் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission - SSC), தற்போது நாட்டின் மத்திய பாதுகாப்புப் படைகளில் (Central Armed Police…
மாதம் ரூ.69,100 வரை சம்பளம்..!! மொத்தம் 25,487 காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!!
மத்திய அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பி வரும் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission - SSC), தற்போது நாட்டின் மத்திய பாதுகாப்புப் படைகளில் (Central Armed Police Forces) காலியாக உள்ள கான்ஸ்டபிள் (GD) பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, மொத்தம் 25,487 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
tamilxpress.com
December 2, 2025 at 9:54 AM
தவெகவில் இணையும் 2 ஆளுங்கட்சி அமைச்சர்கள்..!! சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா..!! அச்சத்தில் திமுக தலைமை..!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை தன்பக்கம் ஈர்க்கும் வியூகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,…
தவெகவில் இணையும் 2 ஆளுங்கட்சி அமைச்சர்கள்..!! சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா..!! அச்சத்தில் திமுக தலைமை..!!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை தன்பக்கம் ஈர்க்கும் வியூகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியத் தலைவர்கள் தவெக-வுக்குத் தாவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவுக்கு தாவும் திமுக அமைச்சர்கள் : தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனா, ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தபோது, "அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல; திமுகவில் இருக்கும் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள் எங்கள் கட்சிப் பக்கம் வருவார்கள்.
tamilxpress.com
December 2, 2025 at 8:59 AM
காதலனுடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்த கள்ளக்காதலி..!! அடுத்த நொடியே நடந்த பயங்கரம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான பிரியங்கா என்பவர், தனது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக நடந்த…
காதலனுடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்த கள்ளக்காதலி..!! அடுத்த நொடியே நடந்த பயங்கரம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான பிரியங்கா என்பவர், தனது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக நடந்த வாக்குவாதத்தின்போது, கோவிந்தராஜ் என்ற அந்த நபர் மது பாட்டிலால் பிரியங்காவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பிரியங்காவுக்கு ஏற்கனவே செல்வந்தர் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த பிரியங்காவுக்கு, நெற்குன்றத்தைச் சேர்ந்த 34 வயதான கோவிந்தராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
tamilxpress.com
December 2, 2025 at 8:46 AM
“உன்னை நம்புனதுக்கு இப்படி ஏமாத்திட்டியே”..!! செல்போனில் கொட்டிக் கிடந்த வீடியோக்கள்..!! ஆடிப்போன இளம்பெண்..!!

அரசு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் குறுக்கு வழிகளை நம்பி இடைத்தரகர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த…
“உன்னை நம்புனதுக்கு இப்படி ஏமாத்திட்டியே”..!! செல்போனில் கொட்டிக் கிடந்த வீடியோக்கள்..!! ஆடிப்போன இளம்பெண்..!!
அரசு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் குறுக்கு வழிகளை நம்பி இடைத்தரகர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரிப் பெண் ஒருவரிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ. 25 லட்சம் பணம், 5 பவுன் நகை மோசடி : நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் கீழூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பட்டதாரிப் பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும், அரசு வேலைக்குத் தீவிரமாக முயற்சி செய்து வந்துள்ளார்.
tamilxpress.com
December 2, 2025 at 8:31 AM
வங்கிக் கணக்கை மூடப் போகிறீர்களா..? கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் தப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!!

இன்றைய காலத்தில் நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறோம். சில சமயம் தேவையில்லாத பல கணக்குகளை வைத்திருப்பதால், பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டிய சுமை ஏற்படுகிறது.…
வங்கிக் கணக்கை மூடப் போகிறீர்களா..? கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் தப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!!
இன்றைய காலத்தில் நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறோம். சில சமயம் தேவையில்லாத பல கணக்குகளை வைத்திருப்பதால், பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டிய சுமை ஏற்படுகிறது. இதனால், வங்கிக் கணக்கை மூடிவிடலாம் என்று நினைப்பவர்கள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். குறைந்தபட்ச இருப்புத் தொகை : ஒரு வங்கிக் கணக்கை மூடும்போது, வாடிக்கையாளர்கள் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையை (Minimum Balance) அக்கவுண்ட்டில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் கணக்கை மூடும்போது இந்தத் தொகை இல்லாவிட்டால், அதற்கான அபராதக் கட்டணத்தை வங்கி உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
tamilxpress.com
December 2, 2025 at 8:18 AM
பணத்தின் மதிப்பு குறையும்..!! மனிதர்களுக்கு வேலையே இருக்காது..!! பொருட்கள் இலவசமாக கிடைக்கும்..!! எலான் மஸ்கின் அதிர்ச்சி கணிப்பு..!!

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் தற்போது ஒரு விவாதம் சூடுபிடித்துள்ளது. இதற்குக் காரணம், பிரபல உலக பணக்காரர் எலான் மஸ்க்…
பணத்தின் மதிப்பு குறையும்..!! மனிதர்களுக்கு வேலையே இருக்காது..!! பொருட்கள் இலவசமாக கிடைக்கும்..!! எலான் மஸ்கின் அதிர்ச்சி கணிப்பு..!!
உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் தற்போது ஒரு விவாதம் சூடுபிடித்துள்ளது. இதற்குக் காரணம், பிரபல உலக பணக்காரர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ஒரு அதிரடி கணிப்புதான். செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence - AI) மனித உருவ ரோபோக்களும் (Humanoid Robots) கட்டுக்கடங்காத வளர்ச்சி அடையும்போது, வருங்காலத்தில் மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பணம் அதன் மதிப்பை இழந்து, AI மற்றும் ரோபோக்களால் இயங்கும் ஒரு முற்றிலும் புதிய சகாப்தம் உருவாகும் என்பதே அவரது கணிப்பின் சாராம்சம்.
tamilxpress.com
December 2, 2025 at 2:22 AM
திமுக முன்னாள் MP வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியும், திமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஏ.கே.எஸ். விஜயனின் தஞ்சை வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது, அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை…
திமுக முன்னாள் MP வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியும், திமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஏ.கே.எஸ். விஜயனின் தஞ்சை வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது, அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் இருந்த சுமார் 300 சவரன் தங்க நகைகள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு, கொள்ளையர்கள் அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து இந்தச் சம்பவத்தைச் செய்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டின் பின்புறம் உள்ள வழியாக உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளனர் என்பதற்கான தடயங்கள் சம்பவ இடத்தில் கிடைத்துள்ளன.
tamilxpress.com
December 1, 2025 at 11:59 AM
சாப்பிடாமல் இருந்தால் ரத்த சர்க்கரை அளவு குறையுமா..? மருத்துவ நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கை..!!

வேலைப்பளு, காலைப் பசியின்மை அல்லது எடை குறைப்பு குறித்த தவறான நம்பிக்கை போன்ற காரணங்களால் பலரும் இன்று உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, காலை உணவைச் சாப்பிடாமல் இருப்பது…
சாப்பிடாமல் இருந்தால் ரத்த சர்க்கரை அளவு குறையுமா..? மருத்துவ நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கை..!!
வேலைப்பளு, காலைப் பசியின்மை அல்லது எடை குறைப்பு குறித்த தவறான நம்பிக்கை போன்ற காரணங்களால் பலரும் இன்று உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, காலை உணவைச் சாப்பிடாமல் இருப்பது அதிகரித்துள்ளது. ஆனால், இந்த உணவுத் தவிர்ப்பு, உங்கள் உடலில் இரத்த சர்க்கரை (Blood Sugar) அளவைச் சீராக நிர்வகிக்கும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை என்பது ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம் (Metabolism) மற்றும் நாம் உணவு உண்ணும் நேரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த மிக முக்கியச் செயல்முறையாகும்.
tamilxpress.com
December 1, 2025 at 10:39 AM
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்..!! வீட்டிலிருந்தே ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்..!! கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் உச்ச நிகழ்வுகளான பரணி மற்றும் மகா…
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்..!! வீட்டிலிருந்தே ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்..!! கட்டணம் எவ்வளவு தெரியுமா..?
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் உச்ச நிகழ்வுகளான பரணி மற்றும் மகா தீபத்தை நேரடியாகக் கருவறையில் இருந்து தரிசிப்பதற்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் வழியே வெளியிடப்பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுகளைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்ற முகவரியில் கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டுகளைப் பதிவு செய்துகொள்ளலாம். வரும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.
tamilxpress.com
December 1, 2025 at 5:18 AM
புதிய வாகனங்களை பதிவு செய்ய இனி RTO அலுவலகத்தில் செல்ல வேண்டியதில்லை..!! நாளை முதல் அமல்..!!

தமிழ்நாட்டில் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்ய இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்று…
புதிய வாகனங்களை பதிவு செய்ய இனி RTO அலுவலகத்தில் செல்ல வேண்டியதில்லை..!! நாளை முதல் அமல்..!!
தமிழ்நாட்டில் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்ய இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி இந்தக் கூடுதல் நடைமுறை விலக்கை அனைத்து ஆர்.டி.ஓ. மற்றும் யூனிட் அலுவலகங்களுக்கும் பிறப்பித்துள்ளார். இந்த புதிய விதிமுறை டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை, பொதுமக்கள் புதிதாக வாங்கும் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக டீலர்கள் மூலமாக ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இருந்தது.
tamilxpress.com
November 30, 2025 at 2:55 AM
விவசாயிகளே.. நாளை தான் கடைசி..!! பயிர் காப்பீட்டுக்கு உடனே பதிவு பண்ணுங்க..!!

தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY), குறுவை, சம்பா மற்றும் தாளடி (நவரை) பருவங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய…
விவசாயிகளே.. நாளை தான் கடைசி..!! பயிர் காப்பீட்டுக்கு உடனே பதிவு பண்ணுங்க..!!
தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY), குறுவை, சம்பா மற்றும் தாளடி (நவரை) பருவங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடையும் நிலையில், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கால அவகாச நீட்டிப்பு ஏன்? சம்பா மற்றும் தாளடி (நவரை) பருவப் பயிர்களைக் காப்பீடு செய்வதற்கு தேசிய பயிர்க் காப்பீட்டு வலைத்தளத்தில் (NCIP) செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
tamilxpress.com
November 30, 2025 at 1:30 AM